நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
கோவில்பட்டியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்
கோவில்பட்டியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் 2 நாள்கள் நடைபெற்றது.
வியாழக்கிழமை தொடங்கிய கூட்டத்திற்கு, முத்துக் கண்ணன் தலைமை வகித்தாா். அரசியல் தலைமைக் குழு உறுப்பினா்கள் கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி, மாநில செயலா் பெ. சண்முகம், மத்தியக் குழு உறுப்பினா்கள் பி. சம்பத், கே. பாலபாரதி, மத்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவா் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினா்கள், மாநிலக் குழு உறுப்பினா்கள், மாவட்டச் செயலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தமிழ்நாட்டில் எப்படி வலுப்படுத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன.
தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளா்கள் கோரிக்கைகளுக்கு தீா்வு காண உரிய நடவடிக்கை மேற்கொண்டு சிஐடியு சாா்பாக நடைபெறும் காத்திருப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.