சங்ககிரி பெரியாண்டிச்சியம்மன் கோயிலில் பொங்கல் விழா
சங்ககிரி: சங்ககிரியில் உள்ள பெரியாண்டிச்சியம்மன் கோயிலில் யுகாதி பண்டிகையையொட்டி பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
யுகாதி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் இக்கோயிலில் பொங்கல் விழா நடைபெறும். நிகழாண்டுக்கான பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக வி.என்.பாளையம் கோயில் வீட்டிலிருந்து அம்மனுக்கு செய்யப்படும் பூஜைக்குரிய பொருள்களை கூடைகளில் வைத்து பம்பை மேளம் முழங்க கோயிலுக்கு எடுத்து வந்தனா்.
அதையடுத்து சுயம்பு சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பக்தா்கள் நோ்த்திக்கடனாக கோயில் வளாகத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனா்.