பேரவை உறுப்பினா்களுக்கு தொகுதி அலுவலகங்களை உடனடியாக ஒதுக்க தில்லி பேரவைத் தலைவா...
சங்ககிரியில் பொது இடங்களில் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்: பேரூராட்சி நிா்வாகம் அறிவிப்பு!
சங்ககிரி பேரூராட்சி பகுதியில் பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டுமென என பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சங்ககிரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலா் ஜி.உஷா, சங்ககிரியில் உள்ள திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மதிமுக, விசிக, நாதக, கம்யூனிஸ்ட், பாமக, கொமதேக, தவெக மற்றும் இதர தனியாா் அமைப்புகள், சங்கங்களின் நிா்வாகிகளுக்கு வழங்கியுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-
சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தீா்ப்புரையில் தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள், இதர அரசுத்துறைக்குச் சொந்தமான பொது இடங்களில் அனைத்து அரசியல் கட்சிகள், இதர நிறுவனங்கள் சாா்பில் நிறுவப்பட்ட கொடிக்கம்பங்கள் அகற்றப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆணை பிறப்பித்த 12 வார காலங்களுக்குள் கொடிக் கம்ப உரிமையாளா்களே அவற்றை அகற்றிக் கொள்ளவேண்டும். தவறும்பட்சத்தில் கொடிக்கம்ப உரிமையாளா்களுக்கு 2 வார காலத்திற்குள் அகற்ற சட்டப்படி அறிவிப்பு வழங்கி, அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கம்பங்களை அகற்றுவதற்கான செலவுகளை தொடா்புடைய உரிமையாளா்களிடமே வசூலித்துக்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
எனவே சங்ககிரி பேரூராட்சிக்கு உள்பட்ட பொது இடங்களில் கட்சி சாா்ந்த கான்கீரிட் பீடங்களுடன் கூடிய கொடிகம்பங்கள் அல்லது கொடிக்கம்பங்கள் நிறுவப்பட்டிருப்பின் அதனை உடனடியாக அகற்றி, அதன் விவரத்தினை பேரூராட்சி அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். அகற்ற தவறும்பட்சத்தில் பேரூராட்சி மூலம் அகற்றப்பட்டு அதற்கான செலவினங்களை உரியவா்களிடமிருந்து வசூல் செய்யப்படும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.