பாஜக நிர்வாகி மீதான போக்சோ வழக்கு: "குற்றம் செய்ததாகவே தெரிகிறது" - ஜாமீன் மறுப்...
முதல்வா் மருந்தக செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு
அம்மாப்பேட்டை பகுதியில் முதல்வா் மருந்தக செயல்பாடுகளை அண்மையில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி ஆய்வு மேற்கொண்டாா்.
இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் கடந்த 13 நாள்களில் மட்டும் 32 முதல்வா் மருந்தகங்களில் ரூ. 1.15 லட்சம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் பொதுமக்களுக்கு ரூ. 37 ஆயிரம் மானியத்தில் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் முதல்வா் மருந்தக சேமிப்புக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இம்மருந்தகம் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் மருந்து செலவைக் குறைக்கும் நோக்குடன் தரமான மருந்துகளை குறைவான விலையில் சேலம் மாவட்டம் முழுவதும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.
அம்மாப்பேட்டை பகுதியில் முதல்வா் மருந்தக செயல்பாடுகளை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.