சங்கரன்கோவில் அருகே பள்ளிப் பேருந்து கவிழ்ந்து 10 மாணவா்கள் காயம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திங்கள்கிழமை, பள்ளிப் பேருந்து கவிழ்ந்ததில் 10-க்கும் மேற்பட்ட மாணவா்கள் காயமடைந்தனா்.
சங்கரன்கோவில் அருகே வீரசிகாமணியில் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. திங்கள்கிழமை காலை, அப்பகுதியைச் சோ்ந்த 40 மாணவா்களை ஏற்றிக்கொண்டு பள்ளிப் பேருந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது.
நொச்சிகுளம் அருகே பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வயல்வெளியில் கவிழ்ந்தது. இதில், 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். அவா்களை மீட்டு சங்கரன்கோவில் அரசு, தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். விபத்து குறித்து சோ்ந்தமரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.