கடம்பூரில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினம் கடைப்பிடிப்பு
சட்டப்பேரவை உறுப்பினராக சந்திரகுமார் பதவியேற்பு
ஈரோடு கிழக்கில் வெற்றி பெற்ற சந்திரகுமார் சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்றார்.
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் சந்திரகுமார் பதவியேற்றுக்கொண்டார். சந்திரகுமாருக்கு திங்கள்கிழமை பேரவைத் தலைவர் அப்பாபு, சட்டப்பேரவை உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பா் 14-ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானாா்.
இதையடுத்து, இந்தத் தொகுதிக்கு கடந்த புதன்கிழமை (பிப். 5) நடைபெற்ற இடைத்தோ்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமாா், நாதக வேட்பாளராக மா.கி.சீதாலட்சுமி உள்ளிட்ட 46 போ் போட்டியிட்டனா்.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!
அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தோ்தலைப் புறக்கணித்தன. தேர்தலில் மொத்தம் 1 லட்சத்து 54,890 போ் (67.97 சதவீதம்) வாக்களித்தனா். இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிகிக்கப்பட்டன.
20 சுற்றுகளின் முடிவில் திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் 1,15,709 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றாா்.
நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி 24,151 வாக்குகளைப் பெற்றாா். வாக்கு வித்தியாசம் 91,558. நோட்டாவுக்கு 6,109 வாக்குகள் பதிவாகி இருந்தன.