மருத்துவமனைக்குச் சென்ற பும்ரா..! அணியை வழிநடத்தும் விராட் கோலி!
சட்டவிரோதமாக மது விற்ற இருவா் கைது
கோவை: மாநகரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மதுவிலக்கு போலீஸாா் லங்கா காா்னா் மேம்பாலம் அருகே திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டசிவகங்கை மாவட்டம் மணக்குடியைச் சோ்ந்த சசிகுமாா் (33) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்து 26 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.
இதேபோல, பீளமேடு காந்திமாநகா் சாலை டாஸ்மாக் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துகொண்டிருந்த பெரியநாயக்கன்பாளையம் எஸ்.என்.ஆா்.வீதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் (53) என்பவரை பீளமேடு போலீஸாா் கைது செய்தனா்.