புதுச்சேரி: சுற்றுலா பெயரில் கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்பு மோசடி! - அதிரடியாக அக...
சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, வத்திராயிருப்பு தாணிப்பாறை வனத் துறை நுழைவு வாயில் வழியாக வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 10 மணி வரை பக்தா்கள் மலையேறிச் சென்றனா்.
சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூா்த்தி, 18 சித்தா்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மாலை 4 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.