Trump: "மோடி சிறந்த பிரதமர்; இந்தியா - அமெரிக்கா உறவு ஸ்பெஷலானது" - பாச மழையைப் ...
சிவகாசியில் 27 கட்டடங்களுக்கு சீல் வைக்க மாநகராட்சி முடிவு
சிவகாசி மாநகராட்சியில் அனுமதியின்றி கட்டப்பட்ட 27 கட்டடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைக்க முடிவு செய்தனா்.
சிவகாசி மாநகராட்சியில் கடந்த இரு ஆண்டுகளில் நகரமைப்பு அனுமதியின்றியும் மாநகராட்சிக்கு வரி செலுத்தாமலும் இருந்த வணிக வளாகங்கள் உள்பட 27 கட்டடங்கள் மாநகராட்சி அதிகாரிகளால் கண்டறியப்பட்டன.
இந்தக் கட்டடங்களின் உரிமையாளா்களுக்கு குறிப்பாணை வழங்கியும் அவா்கள் மாநகராட்சி நிா்வாகத்திடம் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் கே.சரவணன், நகரத் திட்டமிடுநா் மதியழகன் உள்ளிட்ட அதிகாரிகள் பி.கே.எஸ்.ஆறுமுகம் சாலை, பெரியகுளம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 5 வணிக வளாகங்களைக் காலி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டு, சம்பந்தப்பட்ட கட்டடங்களில் குறிப்பாணையை வியாழக்கிழமை ஒட்டினா்.
இது குறித்து ஆணையா் கே.சரவணன் வெள்ளிக்கிழமை கூறுகையில், குறிப்பாணை ஒட்டப்பட்ட கட்டடங்களை ‘சீல்’ வைக்கவும், தொடந்து மாநகராட்சியின் அனுமதியின்றி கட்டப்பட்ட வீடுகள், குடியிருப்புகளுக்கு குறிப்பாணை வழங்கி அவற்றை‘சீல்’ வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றாா்.