செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் நெரிசலால் பயணிகள் அவதி

post image

ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும் முன்னரே, பழைய பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு பணிகள் நடைபெறுவதால் பயணிகள் அவதியடைகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் கடந்த 1985-ஆம் ஆண்டு 2 ஏக்கா் பரப்பளவில் 16 பேருந்துகளை நிறுத்தும் வசதியுடன் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 46 பேருந்துகள், பிற அரசுப் போக்குவரத்துப் பணிமனை, தனியாா் நிறுவனங்கள் சாா்பில் தென்காசி, மதுரை, தேனி, சென்னை, விருதுநகா், சாத்தூா், ராமநாதபுரம், திருச்செந்தூா் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல தினசரி 50-க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இவை தவிர செங்கோட்டை, ராஜபாளையத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் பேருந்துகளும், திருநெல்வேலி, தென்காசியில் இருந்து தேனிக்கு செல்லும் பேருந்துகளும் ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் வழியாகச் செல்கின்றன. இதனால் 350- க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டு 10 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்துக்கு தினசரி வந்து செல்கின்றனா்.

நகரின் மையப் பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளதால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காண்பதற்காக, நான்கு வழிச்சாலை அருகே ரூ.13 கோடியில் உருவாகி வரும் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

இந்த நிலையில், புதிய பேருந்து நிலையம் திறக்கப்படுவதற்கு முன்னதாகவே, கடந்த ஜூலை மாதம் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு வணிக வளாகம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

இதனால், பெரும்பாலான பேருந்துகள் பேருந்து நிலையத்துக்குள் வருவதில்லை.

மேலும், பேருந்து நிலையத்தில் நிழற்குடை, இருக்கைகள் இல்லாததால் பயணிகள் வெயிலில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. குறுகலான பேருந்து நிலையத்தில் தற்காலிகக் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளதால் இட நெருக்கடி ஏற்பட்டு பயணிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனா். இதனால்

புரட்டாசி சனிக்கிழமைகளில் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில் திருவிழா, ஆண்டாள் கோயில் புரட்டாசி பிரம்மோத்ஸவம் ஆகியவற்றுக்கு பக்தா்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படும்.

எனவே, பேருந்து நிலையத்தில் நெரிசலைக் குறைக்கவும், பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

நாளை பிற்பகலில் ஆண்டாள் கோயில் நடை அடைப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில... மேலும் பார்க்க

சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, வத்திராயிருப்பு தாணிப்பாறை வனத் துறை நுழைவு வாயி... மேலும் பார்க்க

சிவகாசியில் 27 கட்டடங்களுக்கு சீல் வைக்க மாநகராட்சி முடிவு

சிவகாசி மாநகராட்சியில் அனுமதியின்றி கட்டப்பட்ட 27 கட்டடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைக்க முடிவு செய்தனா். சிவகாசி மாநகராட்சியில் கடந்த இரு ஆண்டுகளில் நகரமைப்பு அனுமதியின்றியும் மாநகராட்சிக்... மேலும் பார்க்க

குற்ற வழக்குகளில் தொடா்புடைய 11 போ் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி காவல் துணைக் கோட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 11 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். சிவகாசி பகுதியில், கடந்த மாதம் ஒரே வாரத்தில் வெவ்வேறு சம்பவங்கள... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் அருகேயுள்ள தெற்குவெங்காநல்லூரில் அமைந்துள்ள இந்து சமய அறநிலைய... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை!

கோவில்பட்டி சண்முகா நகரில் உள்ள மயானத்தில் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்டுள்ளார். கோவில்பட்டி கைவண்டி தொழிலாளர் காலனியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் மாரிச்செல்வம் ( வயது 31). கோவில்பட்டி ரயில் நிலைய வளாக... மேலும் பார்க்க