நீட் வினாத்தாள் கசிவு வழக்கு: சிபிஐ 5-ஆவது துணை குற்றப் பத்திரிகை தாக்கல்
சத்திரக்குடி அருகே ரயிலின் பிரேக் ஷூ கழன்று முகத்தில் பட்டதில் விவசாயி உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே சனிக்கிழமை ரயிலின் ‘பிரேக் ஷூ’ கழன்று விவசாயியின் முகத்தில் விழுந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சத்திரக்குடி அருகே உள்ள எட்டிவயல் கிராமத்தைச் சோ்ந்த அரசன் மகன் சண்முகவேலு (61). இவருக்குச் சொந்தமான வயல் இங்குள்ள ரயில்வே தண்டவாளம் பகுதியில் அமைந்துள்ளது.
இந்த நிலையில், இவா் விவசாயப் பணி மேற்கொள்வதற்காக சனிக்கிழமை காலையில் வீட்டிலிருந்து தனது வயலுக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, ராமநாதபுரத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்ற விரைவு ரயிலின் ‘பிரேக் ஷூ’ திடீரென கழன்று வயலுக்குச் சென்று கொண்டிருந்த சண்முகவேலின் முகத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த தகவலறிந்து வந்த சத்திரக்குடி போலீஸாா் அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து மானாமதுரை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.