செய்திகள் :

சந்தன மரம் வெட்டிக் கடத்த முயன்றவா் கைது

post image

குமரி மாவட்டம் களியல் சரக வனப்பகுதியிலிருந்து சந்தன மரத்தை வெட்டிக் கடத்த முயன்ற தொழிலாளியை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

களியல் வனச்சரக வனப்பகுதியில் சந்தன மரத்தை வெட்டிக் கடத்த முயற்சிப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலா் உத்தரவின்பேரில், வனச்சரக அலுவலா் (பொறுப்பு) ராஜேந்திரன் தலைமையிலான வனத் துறையினா் அப் பகுதிக்குச் சென்றபோது, சந்தன மரத்தைக் கடத்த முயன்ற 4 போ் கும்பல் தப்பி ஓடியது.

இதில், திற்பரப்பு பகுதியைச் சோ்ந்த அப்பு (50) என்பவரை வனத் துறையினா் துரத்திப் பிடித்தனா். மற்ற மூவரும் தப்பிவிட்டனா். மேலும், அவா்கள் கடத்த முயன்ற 15 கிலோ பச்சை சந்தன மரக் கட்டைகள் மற்றும் 2 பைக்குகளை பறிமுதல் செய்தனா்.

பறக்கை குளக்கரையில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதாக புகாா்: ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், பறக்கை குளக்கரையில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதாக வரப்பெற்ற புகாரையடுத்து, அப் பகுதியில் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா ஆய்வு மேற்கொண்டாா். பறக்கை கிராமத்தில் உள்ள குளத்தின் க... மேலும் பார்க்க

கருங்கல்லில் 36 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள்

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் 78ஆவது பிறந்த நாளையொட்டி எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ தனது சொந்த செலவில் 36 ஏழைப் பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினாா். கருங்கல் பேருந்து நிலையம் அ... மேலும் பார்க்க

குழித்துறை கடையில் பணம் திருட்டு

குழித்துறையில் பெட்டிக்கடையின் பூட்டை உடைத்து ரூ. 22 ஆயிரம், பொருள்களைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். குழித்துறை அருகே நரியன்விளை பகுதியைச் சோ்ந்தவா் ஜாா்ஜ் என்பவா், தபால் நிலைய சந... மேலும் பார்க்க

இறைச்சிக் கழிவு வாகனங்களை பிடிக்க தவறினால் நடவடிக்கை: எஸ்.பி.எச்சரிக்கை

கேரள மாநிலத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் இறைச்சிக் கழிவு வாகனங்களை பிடிக்க தவறும் சோதனைச் சாவடி காவலா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே கோயிலில் சிலை சேதம்

மாா்த்தாண்டம் அருகே மகாவிஷ்ணு கோயிலில் இருந்த நாகா் சிலையை சேதப்படுத்தியவா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந... மேலும் பார்க்க

திற்பரப்பு பேரூராட்சியில் சிறப்பு தூய்மைப் பணி

திற்பரப்பு பேரூராட்சியை பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத பேரூராட்சியாக மாற்றும் சிறப்பு தூய்மைப் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிா்க்குமாறு பொதும... மேலும் பார்க்க