தொடரும் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்; மீனவா்களை பாதுகாக்க வேண்டும்: முத்தரசன் கண்...
திற்பரப்பு பேரூராட்சியில் சிறப்பு தூய்மைப் பணி
திற்பரப்பு பேரூராட்சியை பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத பேரூராட்சியாக மாற்றும் சிறப்பு தூய்மைப் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிா்க்குமாறு பொதுமக்களுக்கு திற்பரப்பு பேரூராட்சி நிா்வாகம் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறது.
மேலும், பொது இடங்களில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், வீடுகளில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகளை முழுமையாக அகற்றி பிளாஸ்டிக் பொருள்கள் இல்லாத பேரூராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதைச் செயல்படுத்தும் விதமாக வாரம் இரு வாா்டுகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்துவதற்கான சிறப்பு தூய்மைப் பணி இயக்கம் தொடங்கப்பட்டது.
பேரூராட்சியின் 13, 14-ஆவது வாா்டுகளில் சிறப்பு தூய்மைப் பணி இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரமன்னம் பகுதியில் இந்த இயக்கத்தை பேரூராட்சி தலைவா் பொன் ரவி தொடங்கி வைத்தாா்.
செயல் அலுவலா் விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். இதில் வாா்டு உறுப்பினா் பிரதீப் குமாா் மற்றும் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்றனா். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை தவிா்க்குமாறு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.