செய்திகள் :

சப்தமே இல்லாமல் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி!

post image

இணையவழி உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி, உணவு டெலிவரி ஆர்டர்களுக்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தை மீண்டும் ரூ.2 உயர்த்தியிருக்கிறது.

அதாவது, இதுவரை பயன்பாட்டுக் கட்டணம் ரூ.12ஆக இருந்த நிலையில், தற்போது இது ரூ.14 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர் பரிவர்த்தனைகளின் அளவு அதிகரித்ததே இந்த கட்டண உயர்வுக்குக் காரணம் என்று நிறுவனம் கூறுகிறது,

அதாவது, தேவை அதிகமாக இருக்கும்போது, அதன் மூலம் லாபத்தை அதிகமாக்கிக் கொள்ளும் நோக்கில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த கட்டண உயர்வானது ஸ்விக்கியின் வழக்கமான கட்டண உயர்வுகளில் மற்றொரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், பிளாட்ஃபார்ம் கட்டணம் சப்தமே இல்லாமல், படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது.

அதாவது, பயன்பாட்டுக் கட்டணம் கடந்த 2023 ஏப்ரல் மாதம் ரூ.2 ஆக இருந்தது, ஜூலை 2024 இல் ரூ.6 ஆக உயர்ந்தது, அக்டோபர் 2024 இல் ரூ.10 ஆக உயர்ந்தது, இப்போது ரூ.14 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 600 சதவீதம் அதிகரிக்கப்பட்டிருப்பதாகக் காட்டுகிறது.

ஸ்விக்கியில் தற்போது நாள்தோறும் 20 லட்சத்துக்கும் அதிகமான ஆர்டர்கள் வருகின்றன. எனவே, இந்தக் கட்டணங்களிலிருந்து நாள்தோறும் வரும் வருவாய், கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்தக் கட்டண உயர்வு குறித்து நிறுவனம் எந்த பொது அறிக்கையையும் வெளியிடவில்லை.

குறிப்பாக, ஸ்விக்கி மற்றும் அதன் முக்கிய போட்டியாளரான ஜொமாட்டோ என இரண்டு நிறுவனங்களுமே தேவை அதிகரித்த காலங்களில் அதிக பிளாட்ஃபார்ம் கட்டணங்களை வசூலித்து வருகின்றன.

இந்த கட்டண உயர்வுக்குப் பிறகும், உணவு ஆர்டர்கள் வருவதில் எந்தக் குறைவும் ஏற்படாத நிலையில் இந்தக் கட்டணத்தையே அவை மாற்றமில்லாமல் வைத்துக்கொள்கின்றன.

2025 - 26ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், ஸ்விக்கி நிறுவனம் தனது நிகர நஷ்டம் ரூ.1,197 கோடியாக அதிகரித்துள்ளதாக அறிவித்த சில நாள்களுக்குப் பின் இந்த பயன்பாட்டுக் கட்டண அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இந்த நஷ்டத் தொகை முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.611 கோடியாக இருந்தது. விரைவு விநியோகப் பிரிவான இன்ஸ்டாமார்ட் இந்த இழப்புகளுக்கு காரணமாக அமைந்துவிட்டது.

ஹிந்துபோல நடித்து 12 பெண்களிடம் மோசடி!

உத்தரப் பிரதேசத்தில் ஹிந்து என்று அடையாளப்படுத்திக் கொண்டு 12 பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் வாரணாசியில் ஷராஃப் ரிஸ்வி என்பவர், தன்னை ஹிந்து என்ற... மேலும் பார்க்க

சோரி சோரி, சுப்கே சுப்கே... வாக்குத் திருட்டு குறித்து புதிய விடியோ பகிர்ந்த ராகுல்

மத்தியில் ஆளும் பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக, குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் புதிய விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.லாபடா ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் மாளிகை அமிா்த பூந்தோட்டம் மக்கள் பாா்வைக்கு!!

குடியரசுத் தலைவா் மாளிகையின் அமிா்த பூந்தோட்டம் இன்று (ஆக.16) முதல் மக்கள் பாா்வைக்கு அனுமதிக்கப்படுகிறது. இதனை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு முறைப்படி வியாழக்கிழமை திறந்துவைத்து பூந்தோட்டத்தை பாா்... மேலும் பார்க்க

மும்பையை புரட்டிப்போட்ட கனமழை! நிலச்சரிவில் 2 பேர் பலி

மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது.விக்ரோலி பகுதியில் நேரிட்ட நிலச்சரிவில், மலையிலிருந்து உருண்டு வந்த பாறைகள் குடிசை மீது விழுந்... மேலும் பார்க்க

இல.கணேசன் மறைவு! நாகாலாந்தில் 7 நாள் துக்க அனுசரிப்பு!

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் காலமானதையடுத்து, நாகாலாந்தில் 7 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.இந்த 7 நாள் துக்க அனுசரிப்பின்போது, மாநிலம் முழுவதும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.... மேலும் பார்க்க

இந்தியா மீது இரண்டாம்கட்ட வரி! டிரம்ப் சூசகம்!

இந்தியா மீது இரண்டாம்கட்ட வரி விதிப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகமாக பதிலளித்துள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் வெள்ளிக்கிழமையில் பேச்சு... மேலும் பார்க்க