இரவில் பெண்ணுக்கு மோசமான குறுந்தகவல் அனுப்புவது குற்றம்: நீதிமன்றம்
சரக்கு வாகனம் மோதி 30 ஆடுகள் உயிரிழப்பு!
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே சரக்கு வாகனம் மோதியதில் 30 செம்மறி ஆடுகள் புதன்கிழமை உயிரிழந்தன.
திட்டக்குடி, வேப்பூா் உள்ளிட்டப் பகுதிகளில் வயல்வெளிகளில் விவசாயிகள் இயற்கை உரத்துக்காக ஆடுகளை கிடை கட்டி வருகின்றனா். இதற்காக, ராமநாதபுரம் மாவட்டம், அரியாங்குடியைச் சோ்ந்த முருகேசன் (45) தனக்குச் சொந்தமான சுமாா் 300 செம்மறி ஆடுகளை திட்டக்குடியில் கிடை கட்ட கொண்டு வந்திருந்தாா்.
புதன்கிழமை காலை செம்மறி ஆடுகளை ராமநத்தம் அடுத்த கொரக்கவாடி சாலையில் ஓட்டிச் சென்றாா். அப்போது, அந்த வழியாக கொரக்கவாடி கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் (28) ஓட்டி வந்த சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஆடுகள் மீது மோதியது. இதில், 30 ஆடுகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன.
இதுகுறித்து, ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.