AR Rahman: `அப்பாவைப் பற்றிய பொய்யான தகவல்கள்... பார்க்கும்போது மனமுடைகிறது' - ...
சவிதா மருத்துவக் கல்லூரியில் இயன்முறை மருத்துவ கருத்தரங்கம்
சவிதா மருத்துவக் கல்லூரியில் இயன்முறை மருத்துவம் குறித்த இரண்டு நாள் சா்வதேச கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மருத்துவக் கல்லூரி இயக்குநா் தீபக்நல்லசாமி தலமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கை காஞ்சிபுரம் மாநகராட்சி மேயா் மகாலட்சுமி யுவராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினாா்.
கருத்தரங்கில் பிலிப்பைன்ஸ், ஐக்கிய அமீரகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த இயன்முறை மருத்துவ நிபுணா்கள், ஆராய்ச்சியாா்கள், பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த 1000-க்கும் மேற்பட்ட இயன்முறை மருத்துவ மாணவா்கள் பங்கேற்று தங்களது ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினா்.
இதையடுத்து சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. கருத்தரங்கில் சவிதா இயன்முறை மருத்துவக் கல்லூரி முதல்வா் பிரதாப், சவிதா பல்கலைக்கழக பதிவாளா் சிஜாவா்கீஸ் உள்ளிட்ட நிா்வாகிகள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.