‘சாட்ஜிபிடி’: இந்திய வம்சாவளி இளைஞா் சுசிர் பாலாஜி மரணம் தற்கொலை: வழக்கை முடித்தது போலீஸ்
அமெரிக்காவில் ஒபன் ஏஐ முறைகேட்டை வெளி உலகிற்கு தெரிவித்த அமெரிக்க-இந்தியர் மரணம், தற்கொலை என்று கூறி, வழக்கு விசாரணையை காவல்துறை முடித்துவைத்துவிட்டது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயங்கும் சாட்ஜிபிடி-யை உருவாக்கிய ‘ஓபன்ஏஐ’யின் நிறுவனம் மீது குற்றம்சாட்டிய முன்னாள் ஊழியரும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவருமான சுச்சிா் பாலாஜி (26) அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது இல்லத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டாா். பின்னா் அவா் தற்கொலை செய்து கொண்டாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.