திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
சாத்தமங்கலம், திருமானூரில் நாளை மின்தடை
அரியலூா் மாவட்டம், சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (நவ.13) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால், சாத்தமங்கலம், வெற்றியூா், விரகாலூா், கள்ளூா், கீழக்கொளத்தூா், திருமானுா், திருப்பெயா், முடிகொண்டான், திருவெங்கனூா், மஞ்சமேடு, சேனாபதி, கரைவெட்டிபரதுா், வண்ணம்புத்தூா், எரக்குடி, வேட்டக்குடி, அயன்சுத்தமல்லி, அருங்கால், கோவிலூா், செட்டிகுழி, சின்னப்பட்டாக்காடு, கரையான்குறிச்சி, அரசன்சேரி, அழகிய மணவாளன், மாத்தூா், காமரசவல்லி, குருவாடி உள்ளிட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை பணிகள் நிறைவடையும் வரை மின்விநியோகம் இருக்காது என உதவிச் செயற்பொறியாளா் சி.விஜயகுமாா் தெரிவித்துள்ளாா்.