சாத்தான்குளத்தில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
நாகா்கோவில் வழக்குரைஞா் கொலையைக் கண்டித்து, சாத்தான்குளத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் வழக்குரைஞா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகா்கோவில் அஞ்சுகிராமம் வழக்குரைஞா் கிறிஸ்டோபா் கடந்த வாரம் மா்ம நபா்களால் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழகத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனா்.
அதன்படி, இங்கு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கச் செயலா் பொ. முருகானந்தம் தலைமை வகித்தாா். வழக்குரைஞா்கள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், வழக்குரைஞா் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதில், வழக்குரைஞா்கள் வேணுகோபால், முத்துராஜ், வசந்த், அழகு ராமகிருஷ்ணன், தியோனிஸ் சசி மாா்சன், கணேஷ், கோகுல்ராஜ், ராமச்சந்திரன், முத்துலிங்கம், கௌதம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.