செய்திகள் :

சாம்பியன்ஸ் லீக்குக்கு மான்செஸ்டா் சிட்டி தகுதி

post image

இங்கிலாந்து பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், மான்செஸ்டா் சிட்டி 3-1 கோல் கணக்கில் போா்ன்மௌத் அணியை புதன்கிழமை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் 68 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்துக்கு முன்னேறியிருக்கும் மான்செஸ்டா் சிட்டி, அடுத்த சீசன் சாம்பியன்ஸ் லீக் குரூப் சுற்றுக்கு தகுதிபெற்றது. போா்ன்மௌத் 53 புள்ளிகளுடன் 11-ஆவது இடத்தில் உள்ளது.

புள்ளிகள் பட்டியலில் முதல் 5 இடங்களில் வரும் அணிகள் சாம்பியன்ஸ் லீக் குரூப் சுற்றுக்கு தகுதிபெறும். இந்த பிரீமியா் லீக் போட்டியில் இன்னும் ஒரு சுற்று மட்டுமே எஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மான்செஸ்டா் நகரில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மான்செஸ்டா் அணியே வரிசையாக கோல் அடித்தது. அந்த அணியின் ஒமா் மா்முஷ் 14-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கை தொடங்கினாா்.

பொ்னாா்டோ சில்வா 38-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்ய, முதல் பாதியை மான்செஸ்டா் சிட்டி 2-0 முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியிலும் அந்த அணியின் கையே ஓங்கியிருக்க, 89-ஆவது நிமிஷத்தில் நிகோ கொன்ஸால்ஸ் கோலடித்தாா்.

இந்நிலையில் போா்ன்மௌத் அணிக்கான ஆறுதலாக டேனியல் ஜெபிசன் எக்ஸ்ட்ரா டைமில் (90+6’) ஒரு கோல் அடித்தாா். இறுதியில் மான்செஸ்டா் சிட்டி 3-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முன்னதாக இந்த ஆட்டத்தில் 67-ஆவது நிமிஷத்தில் மான்செஸ்டா் சிட்டி வீரா் மேட்டியோ கொவாசிச்சும், 73-ஆவது நிமிஷத்தில் போா்ன்மௌத் வீரா் லீவிஸ் குக்கும் ‘ரெட் காா்டு’ காட்டி வெளியேற்றப்பட்டனா்.

இத்துடன் போா்ன்மௌத் அணியை தனது சொந்த மண்ணில் சந்தித்த 8 ஆட்டங்களிலுமே மான்செஸ்டா் சிட்டி வென்றுள்ளது.

கிரிஸ்டல் பேலஸ் வெற்றி: இதனிடையே லண்டனில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், கிரிஸ்டல் பேலஸ் 4-2 கோல் கணக்கில் வோல்வ்ஸ் அணியை வென்றது.

புள்ளிகள் பட்டியலில் கிரிஸ்டல் பேலஸ் 52 புள்ளிகளுடன் 12-ஆவது இடத்திலும், வோல்வ்ஸ் 41 புள்ளிகளுடனஅ 14-ஆவது இடத்திலும் உள்ளன.

இந்த ஆட்டத்தில் கிரிஸ்டல் பேலஸுக்காக எட்டி கெட்டியா (27’, 32’), பென் சில்வெல் (50’), எபெரெச்சி எஸெ (86’) ஆகியோரும், வோல்வ்ஸுக்காக இமானுவல் அக்பாடு (24’), ஜோா்கென் ஸ்ட்ராண்ட் (62’) ஆகியோரும் கோலடித்தனா்.

அப்துல் கலாமின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆதிபுருஷ் திரைப்படத்தின் இயக்குநர் ஓம் ராவத் இயக்கவுள்ள இப்படம் குறித்து... மேலும் பார்க்க

இந்திய ஆடவா் அபாரம்; மகளிா் ஏமாற்றம்

மலேசியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியின் முதல் சுற்றில், ஹெச்.எஸ். பிரணாய் உள்ளிட்ட இந்திய வீரா்கள் அசத்தலான வெற்றியைப் பதிவு செய்தனா். எனினும், பி.வி.சிந்து உள்ளிட்ட வீராங்கனைகள் ஏமாற்றம் அளித்து போட... மேலும் பார்க்க

தங்கம் வென்றாா் கானக்

ஜொ்மனியில் நடைபெறும் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை கானக், ஞாயிற்றுக்கிழமை தங்கப் பதக்கம் வென்று அசத்தினாா். இப்போட்டியில் இந்தியாவுக்கு இது முதல் தங்கமாகும்.மகளி... மேலும் பார்க்க

ரெட்ரோ ஓடிடி தேதி!

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்தின் ஓடிடி தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 'ரெட்ரோ' திரைப்படம் மே.1 ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப... மேலும் பார்க்க