``எந்த பேரிடராலும் கேரளாவை தோற்கடிக்க முடியாது'' - வயநாடு டவுன்ஷிப் அடிக்கல் விழ...
'சாரி சாரி பேச்சு வழக்குல..' - சட்டமன்றத்தில் செந்தில் பாலாஜியை மாப்பிள்ளை என அழைத்த அதிமுக எம்எல்ஏ
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒருபகுதியாக, சட்டமன்றத்தில் நகராட்சி நிர்வாக துறையின் மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.
அப்போது எழுந்து பேசிய அதிமுக எம்.எல்.ஏ கருப்பண்ணன், ``தனியார் நிறுவனங்களில் சோலார் பேனல் நிறைய போடுகிறார்கள். அதில், EB கெபாசிட்டி 100 KV மட்டும்தான் அனுமதிக்கப்படுகிறது. வெயில் காலத்தில் மின்சாரம் போதவில்லை. அதனால், 100 KV-யை 120 KV-யாகக் கொடுத்தால் சௌரியமாக இருக்கும்.

அதனால், EB-க்கு எந்த இழப்பும் இல்லை. மாப்பிள்ளைக்கு நன்றாகத் தெரியும்." என்று அமைச்சர் செந்தில் பாலாஜியைக் குறிப்பிட்டு பேசினார். உடனே அவையில் சிரிப்பலை எழ, ``சாரி சாரி பேசிப் பேசி அப்படியே வந்துவிட்டது. 100 KV-யை 120 KV-யாகக் கொடுக்க அனுமதிக்க வேண்டும்." என்று கோரிக்கையாகக் கூறி அமர்ந்தார்.

அதைத்தொடர்ந்து பதிலளித்த மாநில மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ``மிக விரைவாக அதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டு வருகிறது. துறை அதிகாரிகளிடத்தில் பேசி அதற்கு ஆவணம் செய்யப்படும்" என்று கூறி அமர்ந்தார்.