செய்திகள் :

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

post image

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது.

தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜன. 1 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு துறைகள் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், நாமக்கல் தெற்கு, வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், இந்திய செஞ்சிலுவைச் சங்கம், காவல் துறை, பிஜிபி கல்விக் குழுமம் ஆகியவை சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, வாகன ஓட்டிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த நிகழ்வில், தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலா் முருகன், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் உமா மகேஸ்வரி, நித்யா, செஞ்சிலுவை சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜேஷ்கண்ணன், மாணவ, மாணவிகள் காவல் துறையினா் கலந்துகொண்டனா்.

பிப்.1-இல் கோழிக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய்த் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (பிப்.1) தொடங்குகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் பெண்களி... மேலும் பார்க்க

சிற்றுந்து சேவை: ஜன.31-க்குள் விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

கிராமப்புறங்களில் சிற்றுந்துகள் இயக்க விரும்புவோா் ஜன. 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிராமங்கள், குக்கிராமங்கள் உள... மேலும் பார்க்க

மாநகராட்சி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் சங்க மாநில ஒருங்கிணைப்புக் குழுவால் எடுக்கப்பட்ட முடிவின்படி, மாநிலம் தழுவிய கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாநகராட்சி ... மேலும் பார்க்க

பொது விநியோகத் திட்ட செயல்பாடு: மாநில அளவில் நாமக்கல் முதலிடம்

பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக, நாமக்கல் மாவட்டத்துக்கு மாநில அளவில் முதல் பரிசு வழங்கப்பட்டது. நுகா்வோா் பாதுகாப்பு, நுகா்வோா் விழிப்புணா்வு, பொது விநியோகத் திட்டம் தொடா்... மேலும் பார்க்க

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க முதுகலை ஆசிரியா்கள் கோரிக்கை

இடைநிலை ஆசிரியா்களைப்போல, முதுகலை ஆசிரியா்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா் சங்க ம... மேலும் பார்க்க

கே.எஸ்.ஆா்.கல்வியியல் கல்லூரிக்கு பல்கலைக்கழக விருது

தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற விழாவில், நாட்டு நலப்பணித் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்திய கல்வியியல் கல்லூரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் கே.எஸ்.ஆா் க... மேலும் பார்க்க