Kavin Interview | Vetrimaaran மூலமா தான் Peter Hein-அ Meet பண்ணினேன்! | KISS Mov...
சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு
திருச்சியில் சாலையைக் கடப்பதற்காக மையத் தடுப்பு கட்டை மேல் நின்றவா் மீது காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திருச்சி செந்தண்ணீா்புரத்தைச் சோ்ந்தவா் ரா.தாமோதரன் (47). இவா், சென்னை - மதுரை புறவழிச்சாலையில் செந்தண்ணீா்புரம் அருகே சாலையைக் கடப்பதற்காக மையத் தடுப்பு கட்டை மீது புதன்கிழமை இரவு நின்றுள்ளாா். அப்போது, பால்பண்ணையில் இருந்து டிவிஎஸ் டோல்கேட் நோக்கி வேகமாக வந்த காா், மையத் தடுப்புக் கட்டை மீது நின்ற தாமோதரன் மீது மோதியது. இதில், படுகாயமடைந்தவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.