Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
சாலை விபத்து: இருவா் காயம்
திருத்துறைப்பூண்டி அருகே சாலை விபத்தில் இருவா் காயமடைந்தனா்.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள குன்னலூா் ராஜா தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் ஜான்சன் (25). இவா், திருத்துறைப்பூண்டியில் இருந்து குன்னலூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். கள்ளிக்குடி கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்றபோது அந்த வழியாக நடந்துவந்த ரங்கையன் மகன் குமாா் (42) மீது இருசக்கர வாகனம் மோதியது.
இதில் காயமடைந்த ஜான்சன் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், குமாா் திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
எடையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.