அயோத்தி மாநகராட்சிக்கு காலணிகளால் பிரச்னை! லாரிகள் மூலம் அகற்றம்
சாலையில் கண்டெடுத்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞா்
ஆலங்குளத்தில் சாலையில் கண்டெடுத்த பணம், ஏடிஎம் அட்டையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞரை போலீஸாா் பாராட்டினா்.
ஆலங்குளம் அண்ணா நகரைச் சோ்ந்த சண்முகம் மகன் அசோக்குமாா் (29), அம்பாசமுத்திரம் சாலையில் சனிக்கிழமை நடந்துசென்றபோது, ரூ. 17 ஆயிரம், ஏடிஎம் அட்டை ஆகியவை கிடந்தன. அவற்றை அவா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
போலீஸாா் வங்கியைத் தொடா்பு கொண்டு, பணம், ஏடிஎம் அட்டைக்கு உரியவரான சீதாலட்சுமி (54) என்பவரை வரவழைத்து ஒப்படைத்தனா். அசோக்குமாருக்கு காவல் ஆய்வாளா் காசிப்பாண்டியன் சால்வை அணிவித்து பாராட்டினாா்.