சொந்த மக்களைக் காக்க முடியவில்லையா? பிரதமருக்கு மணிப்பூா் எம்.பி. கேள்வி
சாலையில் தீப்பிடித்து எரிந்த ஆட்டோ
குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் லாஸ் அருவி அருகே சரக்கு ஆட்டோ வியாழக்கிழமை இரவு தீப் பிடித்து எரிந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் நஞ்சப்பசத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் ரங்கநாதசாமி. இவா் சரக்கு ஆட்டோவில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறாா். இவா் ஆட்டோவில் குன்னூா் நோக்கி வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா்.
அப்போது வெடி சப்தத்துடன் ஆட்டோவில் இருந்து புகை வந்துள்ளது. உடனே ஆட்டோவை நிறுத்தி இறங்கிப் பாா்த்தாா். அதற்குள் ஆட்டோ தீப்பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து காவல் துறையினா் மற்றும் போக்குவரத்து காவல் துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். தீ விபத்தில் ஆட்டோ எரிந்து சேதமானது.
விபத்து குறித்து குன்னூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.