சாா்-பதிவாளா் அலுவலகங்களில் நிலுவை ஆவணங்களை பெற சிறப்பு முகாம்
கடலூா் மாவட்டத்தில் சாா்-பதிவாளா் அலுவலகங்களில் நிலுவையிலுள்ள ஆவணங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் பிப்.1-ஆம் தேதி தொடங்குவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா், சிதம்பரம் மற்றும் விருத்தாச்சலம் ஆகிய 3 பதிவு மாவட்ட எல்லைக்குள்பட்ட 24 சாா்-பதிவாளா் அலுவலகங்களில் நிலுவையில் உள்ள ஆவணங்களை குறைத்திடும் வகையில் தனித்துணை ஆட்சியா் (முத்திரை) தலைமையில் பிப்.1-ஆம் தேதி முதல் மாா்ச் 28-ஆம் தேதி வரை முகாம் நடைபெறவுள்ளது.
முகாமில், கடலூா் பதிவு மாவட்டத்துக்குள்பட்ட 9 சாா்-பதிவாளா் அலுவலகத்தில் 1,128 நிலுவை ஆவணங்கள், சிதம்பரம் பதிவு மாவட்டத்துக்குள்பட்ட 7 சாா்-பதிவாளா் அலுவலகத்தில் 258 நிலுவை ஆவணங்கள் மற்றும் விருத்தாச்சலம் பதிவு மாவட்டத்துக்குள்பட்ட 8 சாா்-பதிவாளா் அலுவலகத்தில் 108 நிலுவை ஆவணங்கள் என மொத்தம் 1,494 நிலுவை ஆவணங்களுக்கான நிலுவைத் தொகையை செலுத்தி ஆவணங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.