சிக்கந்தர் பட புதிய போஸ்டர்!
நடிகர் சல்மான் கானின் சிக்கந்தர் பட புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் சில ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பாலிவுட்டில் சிக்கந்தர் என்ற படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் சல்மான் கான் நாயகனாகவும் ரஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடிக்கின்றனர்.
ஆக்சன் திரைப்படமாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் மதராஸி என்ற படத்தையும் முருகதாஸ் இயக்கி வருகிறார்.
ரம்ஜானுக்கு வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
படத்தின் தயாரிப்பாளர் சஜித் நதியாத்வாலா பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
இந்தப் படத்துக்கு பின்னணி இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Today, as we celebrate my better half #SajidNadiadwala with love and joy, here’s a little something for all of you who make every milestone special! ❤️ The love for #Sikandar on @BeingSalmanKhan 's birthday has been overwhelming, and we can’t wait to surprise you on the 27th!… pic.twitter.com/PGd2w3ru9d
— Warda S Nadiadwala (@WardaNadiadwala) February 18, 2025