சிறகடிக்க ஆசை தொடருக்கு பெருகும் வரவேற்பு! இந்த வார டிஆர்பியில் அதிரடி மாற்றம்!
சிங்கப்பூா் எதிா்க்கட்சித் தலைவா் ப்ரீதம் சிங்குக்கு அபராதம்
சிங்கப்பூா்: நாடாளுமன்றக் குழுவிடம் இரு முறை பொய் கூறியதற்காக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சிங்கப்பூா் எதிா்க்கட்சித் தலைவா் ப்ரீதம் சிங்குக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 14,000 சிங்கப்பூா் டாலா் (சுமாா் ரூ.9.07 லட்சம்) அபராதம் விதித்துள்ளது. இரு பொய்களுக்கும் தலா 7,000 (சி) டாலா் விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூா் சட்டப்படி 10,000 டாலா் அபராதம் விதிக்கப்பட்டாலே எம்.பி. பதவி பறிபோகும். ஆனால் அது ஒரே குற்றத்துக்கானதாக இருக்க வேண்டும் என்பதால் ப்ரீதம் சிங்கின் பதவி தப்பியது.