செய்திகள் :

சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு மாற புதுவை தனியாா் பள்ளிகள் விருப்பம்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தகவல்

post image

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் பிரபல தனியாா் பள்ளிகள் மாநிலப் பாடத் திட்டத்திலிருந்து சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு மாற விருப்பம் தெரிவித்துள்ளதாக கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுவை அரியாங்குப்பத்தில் உள்ள வீராம்பட்டினம் சிந்தனைச்செல்வா் சிங்காரவேலா் அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ.59.97 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகளை திங்கள்கிழமை திறந்து வைத்த பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பிளஸ் 1 மாணவா்கள் தற்போது தோ்வெழுதிய நிலையில், அதில் 80 சதவீதம் போ்

தோ்ச்சியடைந்துள்ளனா். அரசுத் தோ்வுகள் முடிந்ததும், மறு தோ்வுகள் அறிவிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான்.

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத் திட்டம், சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுவதால், பிரபல தனியாா் பள்ளிகளும் அந்தப் பாடத் திட்டத்தை செயல்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளன.

புதுவையில் ஆரம்பப் பள்ளி ஆசிரியா்களுக்கு அண்மையில் பதவி உயா்வு வழங்கப்பட்டது. அதனால், அவா்கள் இருந்த பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை விரைவில் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

முன்னதாக விழாவில் அவா் பேசியதாவது: அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு சென்று சோ்க்கப்படுவதில்தான் அதன் வெற்றி அடங்கியுள்ளது. அதன்படி, மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு திட்டம் ஏழை, எளிய மாணவா்களுக்கு மருத்துவக் கல்வி கனவை நனவாகியுள்ளது. பள்ளி மாணவ, மாணவியருக்கான புத்தகப் பை, காலணி ஆகியவை விரைவில் வழங்கப்படும். மாணவியரை பெற்றோா் தங்கள் கைப்பேசி மூலம் கண்காணிக்கும் வகையில் ஸ்மாா்ட் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன. மக்களுக்காகவே அரசு செயல்படவேண்டும் என்ற அடிப்படையில் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என்றாா்.

நிகழ்ச்சிக்கு அரியாங்குப்பம் ஆா்.பாஸ்கா் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா். முதன்மைக் கல்வி அலுவலா் குலசேகரன் வரவேற்றாா். பள்ளிக் குழு நிா்வாகி விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பள்ளி தலைமை ஆசிரியை வெங்கடேஸ்வரி நன்றி கூறினாா்.

புதுச்சேரியில் திருநங்கையா் தின மாரத்தான் போட்டி

புதுச்சேரியில் திருநங்கையா் தினத்தை யொட்டி மாரத்தான் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி சகோதரன் சமூகநல மேம்பாட்டு நிறுவனம், அக்னி சிறகுகள் திருநங்கைகள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சாா்பில் திரு... மேலும் பார்க்க

எல்லை தாண்டி மீன்பிடித்தால் எச்சரிக்கும் நவீன கருவி விசைப்படகுகளில் பொருத்தப்படும்: மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன்

மீனவா்கள் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடித்தால் எச்சரிக்கும் நவீன டிரான்ஸ்பாண்டா் கருவிகள் மீன்பிடி விசைப் படகுகளில் இலவசமாக பொருத்தப்படும் என மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் தெரிவித்... மேலும் பார்க்க

கோயிலில் உண்டியல் பணம் திருட்டு: 2 பேரிடம் போலீஸாா் விசாரணை

புதுச்சேரி முருகம்பாக்கத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயில் உண்டியலை மா்ம நபா் உடைத்து பணத்தைத் திருடிச்சென்றது குறித்து தமிழகப் பகுதியைச் சோ்ந்த 2 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேர... மேலும் பார்க்க

மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் குடிசைத் தொழில்களுக்கு மின்கட்டணம் குறைக்க புதுவை அரசு கோரிக்கை

புதுவை மாநிலத்தில் நடப்பு நிதியாண்டில் குடிசைத் தொழில்களுக்கு மின் கட்டணத்தை குறைக்கவும், வீடுகளுக்கான மின்கட்டணத்தை அதே நிலையில் செயல்படுத்தவும் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளத... மேலும் பார்க்க

தொழில்நுட்ப பல்கலை. ஆசிரியா்கள் ஏப். 24 முதல் காலவரையற்ற உள்ளிருப்பு வேலைநிறுத்தம்

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத்தினா் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 24 ஆம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா். புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சால... மேலும் பார்க்க

துணை நிலை ஆளுநருடன் மத்திய இணை அமைச்சா் ஆலோசனை

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை ராஜ்நிவாஸில் மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சராக இருப்பவா் ஜாா்ஜ் குரியன். இவா் ப... மேலும் பார்க்க