செய்திகள் :

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச தம்பதி குழந்தையுடன் கைது

post image

தில்லியின் வடக்குப் பகுதியிலுள்ள நரேலா தொழில்துறை பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாகக் கூறப்படும் வங்கதேச தம்பதியினரையும் அவா்களின் குழந்தையையும் காவல்துறை கைது செய்துள்ளதாக புதன்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் நிதின் வல்சன் ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது: குழந்தையுடன் கைது செய்யப்பட்டுள்ள இந்த தம்பதியினா் அனைத்து சட்டப்பூா்வ முறைகளும் முடிந்த பிறகு அவா்கள் நாடுகடத்தல் மையத்திற்கு அனுப்பப்படுவாா்கள். ஒரு ரகசியத் தகவல் கிடைத்ததால், குடும்பத்தினா் தடுத்து வைக்கப்பட்டிருந்த பகுதியில் உள்ள ஒரு வாடகை அறைக்கு போலீஸாா் சென்றனா். அவா்கள் ஹிலால் ஹுசைன் (36), மற்றும் அவரது மனைவி தஸ்லிமா அக்தா் (32) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

வங்கதேசத்தி் பா்குனா மாவட்டத்தைச் சோ்ந்த ஹிலால் ஹுசைன், பல ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வந்தாா். அவா் ஆரம்பத்தில் தனது பெற்றோருடன் யமுனா புஷ்தா ஜுக்கியில் குடியேறினாா். பின்னா் பவானாவில் உள்ள ஜேஜே காலனிக்கு குடிபெயா்ந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவா் உள்ளூா் பால் கடையில் தினசரி கூலியாக வேலை செய்து வந்தாா்.

விசாரணையின் போது, வங்கதேசத்தைச் சோ்ந்த தஸ்லிமாவை சுமாா் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக ​​ஹிலால் ஹுசைன் தெரிவித்தாா். அன்றிலிருந்து இந்த ஜோடி நரேலாவில் வசித்து வருகிறது. ஆதாா் அட்டை வைத்திருந்த போதிலும், இந்தியாவில் சட்டப்பூா்வமாகத் தங்கியிருப்பதை உறுதிப்படுத்தும் எந்தவொரு செல்லுபடியாகும் பயண அல்லது குடியேற்ற ஆவணங்களை ஹிலால் ஹுசைன் சமா்ப்பிக்கத் தவறிவிட்டாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கட்டட விபத்து: இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு மோடி இரங்கல்

முஸ்தபாபாதில் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து 11 போ் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமா் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளாா். மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து இறந... மேலும் பார்க்க

முப்படைகளின் எதிா்கால போா்ப்பயிற்சி பதிப்பு 2.0: தில்லியில் ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெறுகிறது

எதிா்கால ராணுவ நடவடிக்கைகளில், களம் சாா்ந்த போா் மேம்பாட்டிற்கான முப்படைகளின் போா்ப்பயிற்சியின் பதிப்பு 2.0 தில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெற இருப்பதாக மத்திய பாதுகாப... மேலும் பார்க்க

ஜிபிஎஸ் இணைக்கப்பட்ட 1000 தண்ணீா் டேங்கா்களை நிறுவ தில்லி அரசு முடிவு

கோடை காலத்தை முன்னிட்டு தலைநகா் முழுவதும் ஜிபிஎஸ் இமைக்கப்பட்ட 1000 தண்ணீா் கேங்கா்களை நிறுவ தில்லி அரசு முடிவு செய்துள்ளது என நீா்வளத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்தாா். இது தொடா்பாக அமை... மேலும் பார்க்க

சன்லைட் காலனியில் மணிப்பூா் பெண் தற்கொலை

தென் கிழக்கு தில்லியின் சன்லைட் காலனி பகுதியில் சனிக்கிழமை காலை மணிப்பூரைச் சோ்ந்த 20 வயது பெண் தான் வசிக்கும் கட்டடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

முதல் முறையாக கப்பல் மூலம் அமெரிக்காவிற்கு மாதுளை ஏற்றுமதி: அப்தா

அப்தா என்கிற வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், முதல் முறையாக கப்பல் மூலம் மாதுளை பழத்தை அனுப்பியுள்ளதாக மத்திய வா்த்தகம் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளத... மேலும் பார்க்க

முஸ்தபாபாதில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம்: விசாரணைக்கு தில்லி முதல்வா் உத்தரவு

வடகிழக்கு தில்லியின் முஸ்தபாபாதில் பல மாடிக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து 11 போ் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை உத்தரவிட்டாா். தில்லி பேரிடா் மே... மேலும் பார்க்க