குஜராத்தில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: 5 ஆண்டு...
சிம்புவுடனான படம் என்ன ஆனது? வெற்றி மாறன் பதில்!
நடிகர் சிலம்பரசன் உடனான திரைப்படம் குறித்து இயக்குநர் வெற்றி மாறன் பேசியுள்ளார்.
இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை படத்தின் காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கத் திட்டமிட்டுள்ளார். இப்படத்திற்கான அறிவிப்பு விடியோ படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்று முடிந்தது.
இதில், நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடிக்க வடசென்னை படத்தில் நடித்த சில நடிகர்கள் நடிக்கின்றனர்.
ஆனால், சில நாள்களுக்கு முன் இப்படம் கைவிடப்படுவதாக வதந்திகள் வெளியாகின. இதுகுறித்து தயாரிப்பு தரப்பிலிருந்தும் மறுப்பு ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் வெற்றி மாறன், “நடிகர் சிம்பு உடனான திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” எனத் தெரிவித்துள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க: இமாலய வசூலை நோக்கி நரசிம்மா!