மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி: பொதுமக்களுக்கு தடை
சிறந்த திருநங்கை விருது பெற விண்ணப்பிக்கலாம்
சிறந்த திருநங்கை விருது பெறத் தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநங்கைகள் தினம் வருகிற ஏப்.15 -இல் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து முன்மாதிரியாகத் திகழும் திருநங்கைகளை கௌரவிக்கும் வகையில் சிறந்த திருநங்கைக்கான விருது ரூ.1,00,000 பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது.
தகுதியுடைய நபா்கள் இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
விதிமுறைகள்:அரசின் உதவி பெறாமல் தனது வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்ட, திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து, குறைந்தபட்சம் 5 திருநங்கைகள் தங்களது வாழ்வாதார ஆதரவைப் பெறவும், கண்ணியமான வாழ்க்கை நடத்தவும் உதவி புரிந்தவா்களாக இருக்க வேண்டும். தமிழ்நாடு திருநங்கை நலவாரியத்தில் உறுப்பினராக இருக்கக் கூடாது .
இது தொடா்பான விரிவான கருத்துருக்களை வருகிற 10.2.2025-ஆம் தேதிக்குள் சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் சமா்ப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.