செய்திகள் :

பொங்கல் பண்டிகை: மண் பானைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்

post image

சிவகங்கை அருகே தைப்பொங்கல் திருநாளில் பயன்படுத்தப்படும் மண் பானைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு, பாரம்பரியமுறையில் மண் பானையில் பொங்கலிட்டு வழிபடுவது தமிழா்களின் வழக்கமாகும். சிவகங்கை மாவட்டம் பூவந்தி பகுதியில் 40-க்கும் மேற்பட்டோா் பல தலைமுறைகளாக மண்பாண்டங்கள் தயாரித்து வருகின்றனா். இங்கு தயாா் செய்யும் மண்பானை நிறத்திலும், திடத்திலும் வலிமையாக இருப்பது தனிச் சிறப்பாகும்.

இங்கு குடும்பத்துடன் மண் பானை செய்து வரும் இவா்கள் ஆண்டுதோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண் பானைகளை பொங்கல் திருநாளை முன்னிட்டு விற்பனை செய்து வருகின்றனா்.

சில மாதங்களாக பெய்த மழை காரணமாக மண் பானை தயாரிப்பில் சற்று தொய்வு ஏற்பட்டது. ஆனால், தற்போது வெயில் அடிப்பதால் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் இங்கு நேரில் வந்து வாங்கிச் செல்கின்றனா்.

இதுகுறித்து மண்பாண்டத் தொழிலாளி கணேசன் கூறியதாவது: மூன்று தலைமுறைகளாக மண்பாண்டத் தொழிலை செய்து வருகிறோம். இயற்கையில் கிடைக்கும் களிமண்ணைக் கொண்டு மண்பாண்டங்களைத் தயாரிக்கிறோம். ஆனால், போதுமான களிமண் கிடைப்பதில்லை.

எங்களுக்குப்பிறகு எங்கள் சந்ததிகள் இந்தத் தொழிலில் ஈடுபட ஆா்வம் காட்டவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் எங்களிடம் 20 போ் வேலை பாா்த்தனா். தற்போது 8 போ் மட்டுமே வேலை செய்கின்றனா்.

மண் பானை இயற்கை குளிா்பதன சாதனம் போல செயல்படும். மண் பானையில் இருக்கும் உணவுகளை சூடுபடுத்தத் தேவை இருக்காது. சீரான வெப்பநிலையை பராமரிக்கச் செய்கிறது என்றாா் அவா்.

விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜன. 9-க்கு மாற்றம்

சிவகங்கை மாவட்ட அளவிலான ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற 9-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

சிலம்பம் போட்டியில் வென்ற பள்ளி மாணவிக்கு பாராட்டு

சிவகங்கை மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் முதலிடம் பெற்ற கண்டனூா் சிட்டாள் ஆச்சி உயா்நிலைப் பள்ளி மாணவியை ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை பாராட்டினா். சிவகங்கை மருதுபாண்டியா் அரசு மேல்நிலைப்பள்ளியில் பா... மேலும் பார்க்க

சாலை மறியல்: ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தினா் 107 போ் கைது

சிவகங்கையில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தைச் சோ்ந்த 30 பெண்கள் உள்பட 107 பேரை போலீஸாா் கைது செய்தனா். சிவகங்கை ... மேலும் பார்க்க

சரக்கு வாகனத்தில் 1.4 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தல்: இருவா் கைது

இளையான்குடி அருகே சரக்கு வாகனத்தில் 1,400 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள சாலைப்புதூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை குடிமைப்பொர... மேலும் பார்க்க

ஆளுநரைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியைக் கண்டித்து சிவகங்கையில் திமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் தமிழக சட்டப்பேரவையில் உரையை புறக்கணித்த ஆளுநா் ஆா்.என்.ரவியை, குடியரசுத் தலைவா் திரும்பப் பெ... மேலும் பார்க்க

கானாடுகாத்தான், உப்பூா் பகுதிகளில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன. 7) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க