தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு: ராகுல் பெருமிதம்
சிலம்பம் போட்டியில் வென்ற பள்ளி மாணவிக்கு பாராட்டு
சிவகங்கை மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் முதலிடம் பெற்ற கண்டனூா் சிட்டாள் ஆச்சி உயா்நிலைப் பள்ளி மாணவியை ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை பாராட்டினா்.
சிவகங்கை மருதுபாண்டியா் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாரதியாா் தினத்தையொட்டி மாவட்ட அளவிலான சிலம்பம் சண்டைப் பயிற்சி போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் மாணவிகளுக்கான பிரிவில் கண்டனூா் சிட்டாள் ஆச்சி நினைவு உயா்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு மாணவி ஏ. மகாலட்சுமி வெற்றி பெற்று மாநிலப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றாா்.
இந்த மாணவியை பள்ளியின் செயலா் சிதம்பரம், தலைமையாசிரியா் நடராஜன், உடல்கல்வி ஆசிரியா்கள் நடராஜன், விக்டா், ஆசிரியா்கள் பாராட்டினா்.