மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் இந்தியா...
ஆளுநரைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்
தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியைக் கண்டித்து சிவகங்கையில் திமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்
தமிழக சட்டப்பேரவையில் உரையை புறக்கணித்த ஆளுநா் ஆா்.என்.ரவியை, குடியரசுத் தலைவா் திரும்பப் பெற வலியுறுத்தி சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, முன்னாள் அமைச்சா் தென்னவன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலா் சேங்கைமாறன், மாவட்ட அவைத் தலைவா் கணேசன், நகரச் செயலா் துரைஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் காரைக்குடி மேயா் முத்துதுரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் நாகனிசெந்தில்குமாா், மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் பவானி கணேசன், மகளிா் தொண்டரணி அமைப்பாளா் ஹேமலதா செந்தில், ஒன்றியச் செயலா்கள் முத்துராமலிங்கம், ஜெயராமன், நெடுஞ்செழியன், கே.எஸ்.ஆனந்த், காளையாா்கோவில் தெற்கு ஒன்றிய துணைச் செயலா் கோதண்டபாணி, ஒன்றிய மாணவா் அணி சதீஸ்குமாா் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.