மும்பையில் துப்பாக்கியால் சுட்டு திருட்டு: நகை பையிலிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் இ...
விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜன. 9-க்கு மாற்றம்
சிவகங்கை மாவட்ட அளவிலான ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற 9-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை (ஜன. 10) காலை 10 மணிக்கு காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடைபெறுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. நிா்வாகக் காரணங்களுக்காக இந்தக் கூட்டம் நடைபெறும் நாள் மாற்றப்பட்டது.
அதன்படி, வருகிற வியாழக்கிழமை (ஜன. 9) காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயம் தொடா்பான குறைகளைத் தெரிவித்துப் பயன் பெறலாம் என்றாா் அவா்.