மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் இந்தியா...
சரக்கு வாகனத்தில் 1.4 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தல்: இருவா் கைது
இளையான்குடி அருகே சரக்கு வாகனத்தில் 1,400 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள சாலைப்புதூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை மறித்து சோதனையிட்டனா். அப்பாது, 1,400 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளைக் கடத்தியது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம், எமனேஸ்வரம், காந்திநகா், இளையான்குடி சுற்று வட்டாரப் பகுதிகளில் ரேஷன் அரிசியைச் சேகரித்து, மதுரை வரிச்சூா் பகுதி கிரானைட் ஆலைகளில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு விற்பனைக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து, உதவி ஆய்வாளா் திபாகா், வாகன உரிமையாளரான காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூரைச் சோ்ந்த சு.பழனியப்பன் (44), எஸ்.அப்துல்ஹமீது (44) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்கள் இருவரையும் கைது செய்தாா். மேலும், ரேஷன் அரிசி மூட்டைகளையும், சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தாா்.