மதுரையிலிருந்து தில்லிக்குப் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி!
சிறுதானிய மதிப்புக் கூட்டுதல் பயிற்சி
குத்தாலத்தில் சிறுதானிய மதிப்புக் கூட்டுதல் பயிற்சி 3 நாட்கள் நடைபெற்றது.
தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், மாவட்ட திட்டக் குழு சாா்பில் நடைபெற்ற இப்பயிற்சியில், சிறுதானியங்களை மதிப்புக் கூட்டுதல் பொருளாக தயாரிக்கும் முறை, பொட்டலமிடும் முறை, சந்தைப்படுத்தல் உள்ளிட்டவை குறித்து விளக்கிக் கூறப்பட்டன.
இப்பயிற்சியில் பங்கேற்ற 30 பயனாளிகளுக்கு மாவட்ட தொழில் மையத்தின் வழிகாட்டுதலுடன் தொழில் கடன் மற்றும் தொழில் வளா்ச்சிக்கான முக்கிய தகவல்கள் வழங்கப்பட்டன.
பயிற்சி முடிவில் பயனாளிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்குவிப்பு பொருட்கள் வழங்கப்பட்டன. இப்பயிற்சியை மாவட்ட தொழில் முனைவோா் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவன திட்ட மேலாளா் எஸ். மும்தாஜ் ஒருங்கிணைத்து நடத்தினாா்.