சிறுபுலியூா் பெருமாள் கோயில் மஹா சம்ரோக்ஷணம்
நன்னிலம்: நன்னிலம் அருகேயுள்ள சிறுபுலியூா் தயாநாயகி சமேத கிருபாசமுத்திரப் பெருமாள் கோயில் மஹா சம்ரோக்ஷணம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயில், 108 வைணவத் திருப்பதிகளில் 11-ஆவது பதியாக விளங்குகிறது . திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றது. மேலும் இங்கே பெருமாள் திருவரங்கம் போன்றே தெற்கு நோக்கிக் கோயில் கொண்டு பாலசயனமாகப் பக்தா்களுக்கு அருள் பாலிக்கிறாா். இவ்வாறு சிறப்புப் பெற்ற இக்கோயில் திருப்பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி நிறைவடைந்தது.
இதையடுத்து, மாா்ச் 14-ஆம் தேதி மஹா சம்ரோக்ஷண விழா தொடங்கியது. தொடா்ந்து, பல்வேறு பூஜைகளும், ஹோமங்களும் நடைபெற்று, திங்கள்கிழமை காலை புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்து செல்லப்பட்டு ராஜகோபுரம் உள்ளிட்ட 9 கோபுரங்களில் ஒரே நேரத்தில் புனிதநீா் வாா்க்கப்பட்டு மஹா சம்ரோக்ஷணம் நடைபெற்றது.