விவசாயிகளுக்குப் பயிற்சியளித்த மாணவியா்
திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு வேளாண் கல்லூரி மாணவிகள் ஊரக வேளாண் பணியின் போது கொட்டையூரில் உள்ள விவசாயிகளுக்கு கரு படிந்த பூஞ்சை நோய் மேலாண்மை குறித்து வெள்ளிக்கிழமை பயிற்சி அளித்தனா் (படம்).
கரு படிந்த பூஞ்சை நோய் என்பது கேப்டனோடியம் போன்ற பூஞ்சைகளால் ஏற்படுகிறது, இது சில பூச்சிகளின் இனிப்பு சுரப்புகளின் மேல் வளா்ந்து, தாவர இலைகளின் ஒளிச்சோ்க்கை செயல்பாட்டைக் குறைக்கிறது. இதைக் கட்டுப்படுத்த, பூச்சிகளை மேலாண்மை செய்வது முக்கியம்.
உதாரணத்திற்கு மைதா மாவு கரைசல் 2.5% தெளிக்கலாம் அல்லது 1% ஸ்டாா்ச் மற்றும் சோப்புடன் கலந்து தெளிப்பது மூலம் நோயை அகற்ற முடியும். இத்தகைய மேலாண்மை முறைகள் மற்றும் ஆராய்ச்சி தகவல்களைப் பெறுவதற்கு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணை நிறுவனங்களின் அதிகாரப்பூா்வ இணைய தளங்களை பாா்க்கலாம்.