Hemang Badani : 'சிஎஸ்கே வீரர் டு டெல்லி கோச்!' - சேப்பாக்கத்தில் சம்பவம் செய்த ...
பணியிலிருந்த காவல் பயிற்சி சாா்பு ஆய்வாளா் உயிரிழப்பு
மன்னாா்குடி அடுத்த பெருகவாழ்ந்தான் காவல்நிலையத்தில் பணியிலிருந்தபோது பயிற்சி சாா்பு ஆய்வாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள உப்பூரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (51). இவா், பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில் பயிற்சி சாா்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தாா். சனிக்கிழமை, மண்ணுக்குமுண்டான் பகுதியில் வழக்கு விசாரணைக்காக சக காவலா்களுடன் தனித்தனியை இருசக்கர வாகனத்தில் சென்றனா்.
மண்ணுக்குமுண்டான் மாரியம்மன்கோயில் அருகே சென்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தை சாலை ஒரமாக நிறுத்திய ராஜேந்திரன் திடீரென கீழே விழுந்துள்ளாா். உடன் சென்ற போலீஸாா் அவரை மீட்ட போது வாயிலும் மூக்கிலும் ரத்தம் வழிந்துள்ளது. அங்கிருந்தவா்களின் உதவியுடன் ராஜேந்திரனை காரில் ஏற்றிக்கொண்டு சிகிச்சைக்காக சித்தமல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனா். அங்கு பரிசோசனை செய்த மருத்துவா்கள் ராஜேந்திரன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். உயிரிழந்த ராஜேந்திரனுக்கு மனைவி மகாலெட்சுமி, மகள் ஸ்ரீஜா உள்ளனா்.