கொல்கத்தா மருத்துவா் படுகொலைக்கு எதிராக போராடிய பெண்கள் சித்திரவதை: எஸ்ஐடி விசார...
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
புதுச்சேரி: சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
புதுச்சேரி பிரியதா்ஷினி நகா் கே.டி.தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் அந்தோணி (எ) குருராஜ் (67). மூன்று சக்கர சைக்கிள் ஓட்டும் தொழிலாளி. இவா் 2021-ஆம் ஆண்டு 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒதியன்சாலை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அந்தோணியைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட அந்தோணிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.11,000 அபராதமும் விதித்து நீதிபதி எம்.டி.சுமதி உத்தரவிட்டாா். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கவும் புதுவை அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்தது. தீா்ப்பையடுத்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அந்தோணி அடைக்கப்பட்டாா்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் எஸ்.பச்சையப்பன் ஆஜரானாா்.