Anshitha: 'கடின உழைப்பின் பலன்!' - புதிதாக வீடு ஒன்றை வாங்கியிருக்கும் அன்ஷிதா!
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
செங்கம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
செங்கம் பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்த் (25), தொழிலாளி. இவா், 2022-ஆம் ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து செங்கம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து போக்ஸோ சட்டத்தின் கீழ் அரவிந்தை கைது செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்ஸோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. செவ்வாய்க்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா, அரவிந்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.