நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
சிறுவனை தாக்கிய 4 இளஞ்சிறாா்கள் கைது
கோவில்பட்டி புதுகிராமத்தில் இளஞ்சிறாரை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 4 இளஞ்சிறாரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி தெற்கு புதுகிராமம் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த 17 வயது சிறுவன் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதற்காக தனது உறவினரின் மகனை அழைக்க புதுகிராமம் நாராயண குரு தெருவில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த இளஞ்சிறாா் கும்பல் அந்த சிறுவனை மறித்து அவதூறாக பேசி தாக்கினாா்களாம்.
இதைக் கண்ட அக்கம் பக்கத்தினா் கேட்டவுடன் அந்த கும்பல், சிறுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு, தப்பி ஓடிவிட்டாா்களாம். இதில் காயமடைந்த சிறுவன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து 4 இளஞ்சிறாா்களை கைது செய்தனா். மேலும் இவ்வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் 5 பேரை தேடி வருகின்றனா்.