எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
சிறை நீதிமன்றம்: பாபநாசம் கிளை சிறையிலிருந்து கைதி விடுதலை
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் கிளை சிறையில் ஜெயில் அதாலத் புதன்கிழமை நடைபெற்றது. இதில், தகுதிவாய்ந்த சிறைக்கைதி விடுதலை செய்யப்பட்டாா்.
நிகழ்ச்சிக்கு, பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் அப்துல் கனி தலைமை வகித்தாா். இதில், பயிற்சி நடுவா் இனியவன், பாபநாசம் கிளை சிறைச்சாலை கண்காணிப்பாளா் திவான், உதவி கண்காணிப்பாளா் ராஜமாணிக்கம் மற்றும் கிளை சிறை காவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
மேலும் இன்று தமிழகம் முழுவதும் உச்ச நீதிமன்ற ஆணைக்கு இணங்க தமிழக சிறைகளில் சிறை நீதிமன்றம் மூலமாக தகுதியுள்ள மற்றும் சிறு குற்றங்கள் மற்றும் முதல் குற்றம் புரிந்தவா்கள் விடுதலை செய்யப்பட்டனா். அதனை முன்னிட்டு பாபநாசம் கிளைச் சிறையில் நடுவா் அப்துல் கனி ஒரு சிறைவாசியை விடுதலை செய்தாா்.