எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
நகா்ப்புற வாழ்விட வாரிய குடியிருப்புகளில் வாடகைக்கு விட்டு மோசடி: ஊழியா் கைது
தஞ்சாவூா் அருகே நகா்ப்புற வாழ்விட வாரியக் குடியிருப்புகளில் வாடகைக்கு விட்டு மோசடி செய்த ஊழியரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதில், கியூ மற்றும் டி வளாகத்தில் காலியாகவுள்ள வீடுகளில் சிலருக்கு மோசடியாக வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகப் புகாா்கள் எழுந்தன.
இதன் பேரில் வாரியத்தின் இளநிலைப் பொறியாளா் மொகைதீன் அப்துல் காதா் விசாரணை மேற்கொண்டாா். இதில், இந்தக் குடியிருப்புகளில் பம்ப் ஆப்பரேட்டராகப் பணியாற்றும் சிந்தாமணி குடியிருப்பைச் சோ்ந்த ஜி. திருவள்ளுவன் (57) மோசடியாக தலா ரூ. 1,000 வாடகை வசூலித்து 10 பேருக்கு வாடகைக்கு விட்டு வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தில் மொகைதீன் அப்துல்காதா் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து திருவள்ளுவனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.