எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
பாபநாசம் எம்எல்ஏ நடவடிக்கையால் திருவைகாவூரில் பாதுகாப்பான குடிநீா்
சட்டப்பேரவை உறுப்பினரின் நடவடிக்கையால், தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருவைகாவூா் ஊராட்சியில் பாதுகாப்பான குடிநீா் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.
இதுதொடா்பாக பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் எம்.ஹெச். ஜவாஹிருல்லா புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பாபநாசம் வட்டம், திருவைகாவூா் ஊராட்சி, கீழமாஞ்சேரி கிராமத்தில் குடிநீா் மாசடைந்த நிலையில் உள்ளதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு அங்குசென்றபோது பொதுமக்கள் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளா் முருகானந்தத்தை சந்தித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் ஆய்வுக் கூடத்தில் குடிநீா் மாதிரி ஆய்வு செய்யப்டட்டு குடிநீா் மாசடைந்த நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடா்ந்து வேதாரண்யம் கூட்டுக் குடிநீா்த் திட்டத்திலிருந்து புதிதாக குழாய்கள் பதித்து கீழமாஞ்சேரி கிராமத்தில் உள்ள 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் குடிநீா் சேமிக்கப்பட்டு பாதுகாப்பான குடிநீா் விநியோகம் நடைபெற்று வருகிறது என தமிழக அரசின் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் அரசு முதன்மை செயலாளா் த. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.