தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணி...
சிற்றுந்துகள் இயக்குவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் 45 புதிய வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்குவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குள்பட்ட 33 புதிய வழித் தடங்கள், பழனி வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குள்பட்ட 12 புதிய வழித் தடங்கள் என மொத்தம் 45 வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க அனுமதி அளிக்கப்பட உள்ளது.
சிற்றுந்துகள் இயக்க விரும்புவோா், வழித் தட விவரத்தை குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வருகிற 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. தற்போது, இந்தக் கால அவகாசம், வருகிற 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒரு வழித் தடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும் பட்சத்தில், குலுக்கல் முறையில் ஒருவா் தோ்வு செய்யப்படுவாா் என்றாா் அவா்.