காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் சித்திரை உத்திரப் பெருவிழா உற்சவம் துவக்கம்!
சிலிண்டா்கள் ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து
சத்தியமங்கலம் பண்ணாரி சாலையில் சனிக்கிழமை கேஸ் சிலிண்டா்கள் ஏற்றிச் சென்ற லாரியின் சக்கரத்தில் தீப்பற்றியது.
கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து கேஸ் சிலிண்டா்களை ஏற்றிச் சென்ற லாரி ஈரோடு நோக்கி சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. சிலிண்டா் பாரத்துடன் சென்ற லாரி, திம்பம் மலைப் பாதை வழியாக பண்ணாரி சோதனைச் சாவடியை நெருங்கியது.
அப்போது லாரியின் முன் சக்கரத்தில் திடீரென தீப்பிடித்தது. இதைக் கண்ட உஷாரான லாரி ஓட்டுநா் வெங்கடேஷ் உடனடியாக லாரியை நிறுத்தினாா். பின்னா் அவா், அங்கிருந்த வாகன ஓட்டிகளின் உதவியுடன் லாரியில் இருந்த தண்ணீரை எடுத்து ஊற்றி தீ மேலும் பரவாமல் தடுத்தனா்.
கடும் வெயிலில் திம்பம் மலைப் பாதையில் பயணித்ததால் சக்கரங்கள் வெப்பம் தாங்காமல் தீப்பிடித்திருக்கலாம் என சத்தியமங்கலம் போலீஸாா் தெரிவித்தனா்.